விண்ணில் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய நிகழ்வு: ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு

Photo of author

By CineDesk

விண்ணில் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய நிகழ்வு: ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு

30 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணில் நிகழும் அபூர்வ நிகழ்வு ஒன்று டிசம்பர் 26-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும் இந்த அரிய நிகழ்வை காண தவற வேண்டாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.

வானில் நெருப்பு வளையத்துடன் கூடிய சூரிய கிரகணம் வரும் 26ஆம் தேதி தோன்றுகிறது என்றும் இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 26ஆம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கி, 10.30-க்கு முழுமை பெறும் என்றும், இருப்பினும் கிரகணம் 1.33 மணிக்கு விலகும் என்றும் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

சூரிய கிரகணம் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்நிழலும், வட தமிழகத்தில் வெளிநிழலும் படியும் என்றும், இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்க கூடாது என்றும், அதற்கென வடிவமைக்கப்பட்ட சூரியக்கண்ணாடி வழியாகவே பார்க்க வேண்டும் என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு முன்னர் இதேபோன்ற நெருப்பு வளையத்துடன் கூடிய சூரிய கிரகணம் கடந்த 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது