மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
82
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்ற வாரம் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் தற்போது மழை குறைந்து உள்ளது. தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது இந்த மழை அடுத்த நான்கு நாட்களுக்கு தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் குமரிக்கடல் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது குமரிக் கடல் பகுதியில் சூறை காற்று வீசி வருவதால் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், மற்றும் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை அதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.