இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா!

0
132

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா!

வெந்தயம் இவை உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. நம் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள் வெந்தியம். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும் இருக்கும் வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.மேலும் வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தையும் தருகிறது.

வெந்தயத்தில் வைட்டமின் c இருப்பதால் அது முகத்தை பளிச்சென்று மாற்றும். ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். முகச் சுருக்கங்கள் நீங்கிவிடும் .

வெந்தயத்தை பேஸ்டாக அரைத்து முகத்தில் பயன்படுத்துவதால் முகச் சருமம் இறுகி சுருக்கங்கள் நீங்கும். மேலும் வெந்தியம் கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையல் களிலும் பயனாகிறது.

மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது.இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊறவைத்து சாப்பிடலாம்.

வெந்தியதை அதிக அளவு உட்கொண்டால் உடலில் வாய்வு அளவை அதிகரிக்க கூடும். உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். அதனால் வாய்வு அதிகமாகும் போது பிரச்சனைகள் அதிகரிக்கவே செய்யும்.

குறிப்பாக வாய்வு கோளாறுகள் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை தனித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Previous articleஅதிரடியாக உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்கான வைப்புத்தொகை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
Next articleஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயம் இதை அனைவரும் செய்ய வேண்டும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த அதிரடி உத்தரவு!