அதிரடியாக உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்கான வைப்புத்தொகை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

0
151

நாட்டில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை சில வருடங்களாகவே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி வந்தாலே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வளவு உயரமோ? என்ற பயம் இல்லத்தரசிகள் மத்தியில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை படிப்படியாக அதிகரித்து 1,018 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குபவர்களுக்கான வைப்புத்தொகையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு டெபாசிட் தொகை 1,450 ஆக இருந்து வந்த நிலையில், தற்போது புதிய இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தில் 750 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 2200 ஆக அதிகரித்திருக்கிறது.

2 சிலிண்டர் இணைப்பு பெறவேண்டுமானால் 4,400 ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சிலிண்டருக்கு உரிய ரெகுலேட்டர் விலை 150 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்குரிய கட்டணம் 800 ரூபாயாக இருந்த நிலையில், 350 ரூபாய் அதிகரித்து 1,150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தவிர எரிவாயு டியூப் மற்றும் பாஸ் புத்தகத்திற்கான கட்டணம் 150 ரூபாய் மற்றும் 25 ரூ தனியாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான வாய்ப்பு தொகை கடந்த 2012ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1,250 ரூபாய் கட்டணத்திலிருந்து 200 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,450 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. 10 வருடங்களுக்கு பிறகு தற்சமயம் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்திய அஞ்சல் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
Next articleஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா!