ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை! வெளியான அதிரடி அறிவிப்பு!

0
151

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் நடவடிக்கை குறித்து அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. அதாவது வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் விதத்தில் மத்திய அரசு சென்ற வருடம் இறுதியில் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது, இதன் மூலமாக ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்வது கட்டுப்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.

இதைத்தவிர்த்து 18 வயது நிறைவடைந்த உடனேயே வாக்காளராக பதிவு செய்யும் விதத்தில் வருடத்திற்கு 4 கட்.ஆப் தேதிகள் அதாவது ஜனவரி 1 ஏப்ரல் 1 ஜூலை 1 அக்டோபர் 18 தேதிகளில் வழங்கப்பட்டுள்ளது. அதோடு தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணிக்காக்கும் விதத்தில் மனைவி என்ற வார்த்தையை வாழ்க்கைத்துணை என்று குறிப்பிட்டு நிறுத்தப்படுகிறது.

இதன் மூலமாக தொலைதூரப் பகுதிகளில் அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் ராணுவவீரர், வீராங்கனைகளின் வாழ்க்கைத்துணை வாக்களிக்க வாய்ப்பு உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.

இப்படி தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் விதத்தில் கொண்டுவரப்பட்டிருக்கின்ற இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து 4 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தன்னுடைய வலைதள பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Previous articleமீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Next articleநியாயவிலை கடைகளில் அரிசிக்கு பதிலாக இனி இதுதான் வழங்கப்படும்! தமிழக அரசு பிறப்பித்த புதிய உத்தரவு!