நமது இந்திய மாம்பழத்தின் சிறப்பை கூற ஐரோப்பியா செய்த அசத்தல் ஏற்பாடு! என்னவென்று தெரியுமா?

Photo of author

By Parthipan K

நமது இந்திய மாம்பழத்தின் சிறப்பை கூற ஐரோப்பியா செய்த அசத்தல் ஏற்பாடு! என்னவென்று தெரியுமா?

உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழமாக உள்ளது. மாம்பழத்தின் விளைச்சல் மற்ற  பழங்களைக் காட்டிலும் கூடுதலாக இருக்கிறது. உலகநாடுகளில் மற்ற உணவு வேளாண்மை நிறுவனத்தின்படி 2001 ஆம் ஆண்டில் உலகில் 23 மில்லியன் டன் மாம்பழம் விளைவிக்கப்பட்டது.  கறுத்தகொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், மல்கோவா ருமானி போன்று இன்னும் சில மாம்பழம் வகைகள் இருகின்றது.ஆனால் இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஐரோப்பியா நாட்டில் நமது மாம்பழத்தின் ஏற்றுமதி குறைவாகவே உள்ளது.அதனை அதிகரிக்க தற்பொழுது மக்கள் மத்தியில் கண்காட்சி ஒன்றை தொடங்கியுள்ளனர்.அதனடிப்படையில் நேற்று பிரேசிலில் மாம்பழ திருவிழா தொடங்கியது. அதனை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்த்ரி பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். இந்தியாதான் மாம்பழ உற்பதியில் முதன்மை இடம் வகிக்கிறது.இந்திய எப்போதும் அதிகமா மேற்குதொடர்ச்சி பகுதிகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்கின்றது.ஐரோப்பாவிற்கு மாம்பழ வரத்து சற்று குறைவாகவே காணப்படுகிறது.

பெல்ஜியத்திற்கும், லத்தீன்க்கும் ,அமெரிக்க நாடுகளில் இருந்துதான் அதிகமாக மாம்பழம் வரத்து காணப்படுகிறது என்று, இந்திய தூதரகத்தின் வேளாண்மை மற்றும் கடல்சார் பொருட்கள் ஆலோசகர் டாக்டர் ஸ்மிதா சிரோஹி கூறினார்.ஐரோப்பிய ஒன்றியத்தின் மையமான பெல்ஜியத்தில் மாம்பழத் திருவிழா நடைபெறுவதன் முக்கிய காரணம் இந்திய மாம்பழங்களை ஐரோப்பாவில் தெரியப்படுத்துவதற்காக தான். என்று கூறினார்.

இந்த கண்காட்சியில் ஆந்திராவை சேர்ந்த பங்கனாபள்ளி, உத்தரபிரதேசத்தில் இருந்து மலிஹாபாத் தஷேரி, ஒடிசாவை சேர்ந்த அம்ரபாலி, லக்ஷ்மன் போக், ஹிம்சாகர், ஜர்தாலு மா, லாங்க்ரா போன்ற ஏழு வகை மாம்பழங்கள் காட்சிப்பொருளாக மக்கள் பார்வைக்காக  வைக்கப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் அதனை மிகுந்த ஆர்வதுடன் பார்த்து வருகின்றார்கள். அல்பான்சோ, கேசர் மற்றும் பங்கனாபள்ளி போன்ற மாம்பழ வகைகளின் தேவை ஐரோப்பாவில்  அதிகரித்து வருகின்றது  எனவும் அதனால்தான் மாம்பழத்தின் பெரிய  சந்தை ஐரோப்பாவில் உள்ளது என அந்நாட்டு ஆன்லைன் வியாபாரி ஒருவர் கூறினார்.மேலும் இந்திய மாம்பழங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட இதுபோன்ற மாம்பழ திருவிழா தேவை என்றும் கூறினார்.