விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! தத்தளிக்கும் சென்னை தலைநகரம் !!
சென்னையில் பகலில் வெயிலின் தாக்கம் சுட்டெரித்து காணப்பட்ட நிலையில் இரவில் பெய்த கனமழையால் அமைதியான சூழல் நிலவியது லேசான தூறல் ஆரம்பித்த மழை நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
பட்டினபாக்கம், எழும்பூர் சேத்துப்பட்டு, கிண்டி பல்லாவரம், மந்தைவெளி அடையாறு தரமணி ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அங்கு வாழும் குடிசை வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
சென்னை தலைநகரம்மே மழை நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கியுள்ளது.இதனால் போக்குவரத்து பெரும் பாதிப்படைகின்றன.
தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக பதிவாகியுள்ளது.சென்னையில் அதிகபட்சமாக எண்ணூர் துறைமுகம் பகுதியில் 14.6 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
எம்.ஆர்.சி.நகரில் 12 சென்டிமீட்டர் அளவுக்கும், வில்லிவாக்கத்தில் 10 சென்டிமீட்டர் அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது.தரமணியில் 11 சென்டிமீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் சென்னை, திருவள்ளூர்,கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் புதுவையில் இன்று அதிகனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.