ராஜானா  அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை!

0
129
Rajana it's only me! Bow hole in AIADMK regime!
Rajana it's only me! Bow hole in AIADMK regime!

ராஜானா  அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை!

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர்களின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், நினைத்ததை நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்தார் .

ஒன்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது ஆர்வமாக களம் இறங்கிவுள்ளது.பொதுக்குழு கூட்டத்தை நடக்க விடாமல் தடுக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியாக முயற்சி செய்து வருகிறது. அதிமுக ஒன்றை தலைமை பிரச்சினை கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டது. அக்கூட்டத்தில் இரு தரப்பினரும் கைகலப்பு என பெரிய கலவரம் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள வானகரம் பகுதியில் வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி அதற்கேற்ப சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பக்கம் தரப்பு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த சூழ்நிலையில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டாம் அவை மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.அதிமுகவின் 75 மாவட்ட செயலாளர்களில் 68 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு 7 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆணையர் தலைமையில் ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் என இருதரப்பினரிடையே சாதுவான சூழ்நிலை நிலவி வருவதால் . அவர்கள் மோதல்லில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளதால் அதிமுக தலைமை அலுவலகம் முன்புஆயுதபடை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

Previous articleதலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை!
Next articleஉலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி! பதாகைகள் ஏந்தியபடி உலா வந்த மருத்துவ மாணவர்கள்!