Breaking News

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மிருகம்!! நீதிமன்றம் கடும் தண்டனை!!

Karnataka: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வாலிபர் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30,000 அபராதமும் விதித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மைகோ லோ-அவுட்டில் கடந்த ஆண்டு 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ஒரு வாலிபர் அடுக்குமாடி குடியிருப்புகள் புகுந்த 10 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அதனை பெற்றோரிடம் கூற, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.

அந்த புகாரின்பேரில் மைகோ லே-அவுட் போலிசார்  வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையின் போது அவர் பி.டி.எம். லே-அவுட் என்.எஸ்.பாளையாவை சேர்ந்த அஜய்குவார் என கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இருந்தாலும் இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக பெங்களுரு சிறப்பு கோர்டில் நடந்து வந்த நிலையில்  விசாரணை முடிந்தது. நீதிபதி பாலியல் தொல்லை அளித்த அஜய் குவார்-க்கு சுமார் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் ரூ.30,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜாமீனில் இருந்த அவரை பிடித்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் அவரை போலீசார் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தார்கள். சில மக்கள் இது போன்ற காரணங்களுக்கு பெண்கள் அணியும் உடைகள் தான் காரணம் என கூறுவார்கள். ஆனால் ஒருவர் பார்க்கும் பார்வையும் அவரின் தூய எண்ணத்திலும் தான் இது போன்ற பிரச்சனைகளை தடுக்க முடியும் என புரிந்து கொள்ளுங்கள்.