கிரிக்கெட் விளையாடிய சிறுவன்!! மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு!!

0
236
#image_title

கிரிக்கெட் விளையாடிய சிறுவன்!! மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு!!

மகாராஷ்டிரா மாநிலம் வானவாடி பகுதியை சேர்ந்த 8 ம் வகுப்பு படிக்கும் வேதாந்த் சிவ்ஜி என்ற 14 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென சிறுவன் தனக்கு நெஞ்சுவலி ஏற்படுவதாக கூற உடனடியாக சிறுவனின் பெற்றோர் அழைக்கப்பட்டு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு மணி நேரம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்வில் சிறுவன் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக மாரடைப்பால் பலர் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில் 14 வயது சிறுவனும் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபருவதமலை அடிவாரத்தில் வைக்க 1 லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் உருவான சிவ லிங்கம்!! சிலை!!
Next articleஅரசியலில் இறங்கும் சிம்பு!! டாப் ஹீரோவுடன் போட்டியா??