அரசியலில் இறங்கும் சிம்பு!! டாப் ஹீரோவுடன் போட்டியா??

0
211
Simbu enters politics!! Competition with Top Hero??
Simbu enters politics!! Competition with Top Hero??
அரசியலில் இறங்கும் சிம்பு!! டாப் ஹீரோவுடன் போட்டியா??
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது அசாத்திய திறமையால் தற்போது
உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன்.சினிமா வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும், அதை போராடி தகர்த்தெறிந்து வெற்றி பெறுபவர், நடிகர் சிலம்பரசன்.
அவருக்கு எப்போதும் பெற்றோரின் முழு ஆதரவு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களை தந்த சிலம்பரசன் மிகவும் மனதளவில் தளர்ந்து விட்டார். அவரின் உடல் பருமன் குறித்தும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், உடல் எடையை குறைத்து இவர் நடித்த, ஈஸ்வரன் படமும் சரியாக போகவில்லை.
இந்நிலையில், நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு வெளியான “மாநாடு” படம் சரியான கம்பேக் படமாக அமைந்தது. அப்படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் வசனங்கள் வைத்து நடிகர் சிம்பு அரசியலுக்கு வருவார் என்றும் அப்போது சொல்லப்பட்டது.அதன்பிறகு அவர் நடித்த “வெந்து தணிந்தது காடு”, “பத்துதல” ஆகிய இரு படங்களும் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன.
அவ்வபோது அரசியல் கருத்துகளை பேசும் நடிகர் சிம்பு, விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் தற்போது சொல்லப்படுகிறது. தனது படங்களில் இனி அரசியல் சார்ந்த வாசனங்களும், காட்சிகளும், குறியீடுகளும் இடம்பெறும் வகையில் நடிகர் சிம்பு இயக்குநர்களை கேட்டுக் கொண்டதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப் படுகிறது.
நடிகர் விஜய் அவர்களும் அரசியல் களத்தில் மறைமுகமாக செயல்பட்டு வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் என்னும் பெயரில் அரசியல் சார்ந்த விசயங்களை  நடிகர் விஜய்  செய்து வருகிறார்.
விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப் போவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் மற்றொரு வலுவான கட்சி தேவைதான் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் சவால் விடும் வகையில் மூன்றாவது கட்சி தேவைதான் இந்நிலையில் இவர்களுக்கெல்லாம் போட்டியாக நடிகர் சிம்பு அவர்களும் அரசியல் களத்தில் இறங்குவார் என்றும் ஒருபுறம் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்  தமிழக அரசுக்கு வந்தால் எதிர்ப்பேன் என்று கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏற்கனவே நடிகர் சிம்பு அவர்களுக்கு சீமான் ஆதரவாக பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மற்றொருபுறம் நடிகர் விஜய், நடிகர் சிலம்பரசன் இருவரையும் அரசியல் களத்தில் கொண்டு வந்து இணைப்பதற்கான முயற்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஈடுபடுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.