14 வயது சிறுவனிடம விடுதி வார்டன் பாலியல் துன்புறுத்தல்!! 

Photo of author

By Savitha

14 வயது சிறுவனிடம விடுதி வார்டன் பாலியல் துன்புறுத்தல்!! 

Savitha

14 வயது சிறுவனிடம விடுதி வார்டன் பாலியல் துன்புறுத்தல்!!

கேரளா மாநிலம் இடுக்கியில் அடிமாலியிலுள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த 14 வயது பள்ளி சிறுவனை அந்த விடுதி வார்டன் கல்லார்குட்டியை சேர்ந்த ராஜன் என்பவர் சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.இதனை வெளியில் சொல்லக்கூடாது என சிறுவனை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பைபிள் வகுப்பில்,கலந்து கொண்ட சிறுவன் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையை போன்ற சம்பவம் நடந்தால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்கும் படி கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து மாண்வன் தனக்கு நடந்த கொடுமையை தனது தாயாரிடம் கூறியுள்ளான் உடனடியாக சிறுவனின் தாயார் அடிமாலி போலீசில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் ராஜனை கைது செய்தனர். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.