தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!!
பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தும் அவர்களின் பாதுகாப்பிற்கு தற்போது வரை எந்தவித உத்திரவாதமும் இல்லை. தினந்தோறும் பல இடங்களில் பாலியல் சீண்டல் பாலியல் வன்கொடுமை நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நாக்லாஷிஷாம் என்ற கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி மற்றும் அவரது சகோதரி அவருடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
எப்பொழுதும் வீட்டில் யாராவது ஒருத்தர் இருக்கும் பட்சத்தில் சம்பவம் நடந்தது அன்று யாரும் வீட்டில் இல்லை. இவரது தந்தையும் வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இவரது தாயும் ஆக்ராவிற்கு சென்றுள்ளார். இதுதான் நல்ல சமயம் என்று எண்ணி அந்த கல்லூரி மாணவியை நோட்டம் விட்டு வந்த, புஷ்பேந்திரா என்ற இளைஞர் அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளார். அந்தக் கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கி, பலாத்காரம் செய்துள்ளார். பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை நெறித்து தூக்கில் ஏற்றி கொண்டிருக்கும் வேளையில் கல்லூரி மாணவியின் தங்கை வீட்டிற்குள் வந்துள்ளார்.
அப்பொழுது கதவுகள் மூடப்பட்ட நிலையில் பலமுறை கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவரது தங்கை ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அப்பொழுது அந்த வாலிபர் தனது அக்காவின் கழுத்தை நெறித்து தூக்கில் மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இவர் கூச்சலிட்டதும் அந்த வாலிபர் தப்பித்து ஓடி விட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் புஷ்பேந்திரா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாத சூழலில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் மாட்டி சம்பவம் அப்பகுதி மக்களை கதி கலங்க வைத்துள்ளது.