65 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்புணர்வு செய்த 21 வயது இளைஞர்!! காட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசடிப்பட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் 65 வயதுமிக்க மாரியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கிராமத்தை விட்டு வெளியே உள்ள கடைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது அங்கு பேருந்து ஏதும் இல்லா காரணத்தினால் அவ்வழியே வந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
அந்த இளைஞரும் அந்த மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்துள்ளார். சிறிது தூரம் கடந்ததும் அந்த இளைஞர் அந்த மூதாட்டி இடம் கத்தியை காட்டி மிரட்டி காட்டுக்குள் அழைத்துள்ளார். அவ்வாறு அழைத்து சென்று கத்தியால் குத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வரும் நிலையில் அந்த இளைஞர் தப்பித்து ஓடிவிட்டார். பிறகு அங்கு உள்ளவர்கள் மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அதில் மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் 21 வயதுமிக்க முருகானந்தம் என்பது தெரிய வந்தது. பிறகு முருகானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.