13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்!

Photo of author

By Pavithra

13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சந்தையில் மாட்டை விற்பது போன்று,13 வயது சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் சகோதரியால் 2.70 லட்சத்திற்கு 30 வயது காமகொடூரனுக்கு விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பாப்ரனா கிராமத்தைச் சேர்ந்த லால் என்ற 30 வயது இளைஞர், உத்தரபிரதேச மாநிலம் சோன்பாதரில் வசிக்கும் 13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியுள்ளார்.அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் சகோதரியின் சம்மதத்துடன்,2.7 லட்சம் கொடுத்து சிறுமியை விலைக்கு வாங்கி கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ள சம்பவம் தற்போது அம்பலமாகி உள்ளது.

அந்த 13 வயது சிறுமி, அந்த காம கொடுரனிடமிருந்து,கடந்த வாரம் தப்பித்து வந்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்ந்துள்ளார்.பின்னர் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை,
ராஜஸ்தான் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரிடம் கூறியுள்ளார்.அந்த சிறுமியை காம கொடுரனிடமிருந்து மீட்டெடுத்து,குழந்தைகள் நல காப்பகத்திலே,தங்க வைத்தனர்.மேலும் அந்தச் சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தியபோது,அந்தச் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர்,சுற்றுப்பயணம் கூட்டிச் செல்வதாக அந்த சிறுமியை ராஜஸ்தானிருக்கு அழைத்து வந்து விற்றுள்ளது அம்பலமானது.மேலும் பக்கத்து வீட்டுக்காரர் செய்த செயலானது அந்த சிறுமியின் பெற்றோர்கள் சம்மதத்துடன் செய்ததும் தெரிய வந்துள்ளது.மீட்கப்பட்டுள்ள சிறுமி தற்போது குழந்தைகள் நல காப்பகத்தில் பாதுகாப்பாக உள்ளார் என்று தகவல்கள் கூறப்படுகிறது.