70 ஆண்டு கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்தது தவறு – 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததின் புதிய தகவல்!!

Photo of author

By Savitha

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமான விவகாரம். 70 ஆண்டு கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்தது தவறு.

பராமரிப்பு பணியின் போது அதிக எடை கொண்ட கட்டுமான பொருட்களை வைத்துள்ளனர்-சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் சொல்லும் தகவல்.

சென்னை பாரிமனையில் 4 மாடி கட்டிடம் நேற்றைய தினம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இன்றைய தினம் சம்பவ இடத்தில் தனியார் கட்டுமான சங்கத்தின் அமைப்பான சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் பொறியாளர் குழுவினர் சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் பேட்டி அளித்த சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் ;-

70 ஆண்டு பழமையான கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்து இருக்கக் கூடாது. கட்டிடத்தை முழுவதும் இடித்துவிட்டு புதிய கட்டிடம் தான் அந்த இடத்தில் கட்டுவது சரியான ஒன்று. பாரிமுனை கட்டிடத்தில் பராமரிப்பு பணி நடைபெற்ற போது அதிக எடை கொண்ட கட்டுமான பொருட்களை ஒரே இடத்தில் வைத்துள்ளனர். இதுவே விபத்து ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம்.

வெளிநாடுகளில் கட்டிடத்தின் கட்டுமான தரத்தை 15 வருடத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்கிறார்கள் இந்தியாவில் மும்பை போன்ற நகரங்களில் இது போன்ற ஆய்வு இருக்கிறது.ஆனால் தமிழகத்தில் கட்டுமானத்தின் தரத்தை ஆய்வு செய்வதில்லை. கட்டுமான தரத்தை ஆய்வு செய்வதில் அரசும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து பெட்டி அளித்த கட்டுமான சங்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் ;-

70 வயது முதியவருக்கு மருத்துவம் கொடுப்பது போன்ற தான் 70 வயது பழமையான கட்டிடத்திற்கும் பராமரிப்பு பணியின் போது அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சென்னையில் அண்ணா சாலையில் கட்டுமான சுவர் இடிந்து விழுந்தது, பாரிமனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது போன்றவை பராமரிப்பு சரியாக இல்லை என்பதை காட்டுகிறது என்றார்.