பேரூராட்சியின் கவனக்குறைவால் 7 வயது சிறுமி உயிரிழப்பு! அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்தது ஏன்?
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி என்ற பகுதியில் பூங்கா வைப்பதற்காக பேரூராட்சியானது 7 அடி பள்ளத்தை ஆங்காங்கே தோண்டி வைத்துள்ளது. தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் அப்பள்ளத்தில் மழை நீர் தேங்கி சேரும் சகதியும் ஆக உள்ளது. இந்நிலையில் விடுமுறை தினத்தை கழிக்க சிறுமி அவரது தாயுடன் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு போதுமானளவு கழிப்பறை வசதி இல்லை.அதனால் அச்சிறுமி இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக பேரூராட்சி தோண்டி வைத்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.
விழுந்தவுடன் பலத்த காயம் ஏற்பட்டு அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இச்சிறுமி இறந்ததை மறைக்க பேரூராட்சி அவசர அவசரமாக அவரது உடலை அடக்கம் செய்துள்ளது. மேலும் அப்பகுதியில் அங்கன்வாடிகள் இருப்பதாலும், பிள்ளைகள் தினசரி விளையாடி வருவதாலும் அவர்களும் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழ நேரிடலாம் என அங்குள்ள பொதுமக்கள் கூறி வருகின்றனர். அதனால் அப்பகுதியில் தேவையற்ற பள்ளங்களை மூட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.