தவிட்டுப்பாளையம் அருகே விவசாயின் கண் முன்னே அடியோடு சரியும் வாழைமரம்!..கண் கலங்கி நிற்கும் விவசாயிகள்..

0
158

தவிட்டுப்பாளையம் அருகே விவசாயின் கண் முன்னே அடியோடு சரியும் வாழைமரம்!..கண் கலங்கி நிற்கும் விவசாயிகள்..

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை  பெய்து வருகிறது.இந்த  கனமழையினால் மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.

இதன் காரணமாக காவிரி ஆற்றின் இரு கறைகளையும் தொட்டுக்கொண்டு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் முழங்கால் அளவிற்கு நீர் புகுந்துள்ளது.இதனால் அவ்வூர் மக்கள் பெரும் அவதி பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கரூர் மாவட்டம் நொய்யால்வழியாகவும் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தின் வழியாக வெள்ளம் கரைப்பரண்டு ஓட துவங்கிவுள்ளது. இதன் காரணமாக தவிட்டுப்பாளையத்திலுள்ள காவிரி கரையோர பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் வாழைத்தார், கோரைபுல், தென்னை மரம் உள்ளிட்ட  பல செடிகள் தண்ணீரில் மூழ்கி வருகிறது.

அதனைதொடர்ந்து விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். இதனால் வாழைமரம் மற்றும் தென்னை மரம் ஈரப்பதத்தால் அடியோடு சரிந்து விழுகின்றது. பல மாதங்களாக காப்பாற்றி வந்த இந்த மரங்கள் எல்லாம் கண்ணெதிரே வேரோடு சாயும் காட்சி விவசாயிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை மற்றும் வேதனையும் அளித்து வருகிறது.

Previous articleமத்திய அரசின் விலைவாசி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டம்!
Next articleதெலுங்கில் செம்ம மார்க்கெட் இருந்தாலும்… கார்த்தியின் விருமன் படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு!