கங்குவா ஒரு மொக்க படம் தான்!! ஜோதிகாவுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய சினிமா பத்திரிகையாளர்!!

0
115
A barrage of questions to Jyotika
A barrage of questions to Jyotika

cinema: கங்குவா திரைப்படத்தினை திட்டமிட்டு ஓட விடவில்லை என கூறிய ஜோதிகா விடம் கேள்வி எழுப்பிய பயில்வான் ரங்கநாதன்.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு சினிமாவின் உச்சத்தில் இருந்தது. இந்த திரைப்படத்தின் கலவையான விமர்சனத்திற்கு ஜோதிகா அறிக்கை வெளியிட்டுள்ளார் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவருக்கு கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் அதற்கு பின் திரையரங்கில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இதனால் கங்குவா திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

நவம்பர் 14 வெளியானது கங்குவா திரைப்படம். இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. படத்தின் கதை சரியில்லை,இசை காதை துளைக்கிறது, நிறைய வில்லன்கள் உள்ளனர் ஆனால் என் வருகிறார்கள்? எதற்கு வருகிறார்கள்? என்று தெரியவில்லை. படத்தில் மேக்கிங் நன்றாக உள்ளது ஆனால் கதை என்று ஒன்றும் இல்லை என்று கருத்துகள் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில் சூர்யா மனைவி ஜோதிகா வெளியிட்ட பதிவில் நல்ல படங்களை ஓட வேண்டிய படங்களை ஓடவிடாமல் செய்கிறார்கள். ஓடாத படங்களை ஓட வைக்கிறார்கள். திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் நீங்கள் ஏன் இசைவெளியிட்டிற்கு வரவில்லை?? அப்போது கணவன் நடித்த படத்தின் மீது அக்கறை இல்லையா? படம் ஓடவில்லை என தெரிந்து குதிப்பது ஏன்? கங்குவா ஒரு மொக்க திரைப்படம் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous articleஓய்வூதியதாரர்களே அலர்ட்!! இதைச் செய்யாவிட்டால் பென்ஷன் கட்!!
Next articleதனுஷ் ஒரு சைகோ..10 நாளில் நயன்தாராவின் அந்தரங்க வீடியோ வெளிவரும்!!சுசித்ராவின் சர்ச்சை பேச்சு!!