முகத்தில் பருக்கள் வருவது அனைவருக்கும் நிகழக் கூடிய ஒரு விஷயம் என்றாலும் சிலருக்கு அவை சீக்கிரம் மறைந்துவிடும்.ஆனால் சிலருக்கு அவை கரும் புள்ளிகளாக முகத்தில் தங்கிவிடும்.இவற்றை அலட்சியமாக கருதினால் நாளடைவில் அவை கருமை பள்ளங்களாக மாறிவிடும்.எனவே கருமை நிற புள்ளிகளை மறைய வைக்க இங்கு சொல்லப்படுள்ள அழகு குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)முல்தானி மெட்டி
2)தயிர்
தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து இரண்டு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து குழைத்து முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முக துவாரங்களில் உள்ள கருமை புள்ளிகள் மறைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
1)முல்தானி மெட்டி
2)கடலை மாவு
தயாரிக்கும் முறை:
ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி மற்றும் ஒரு தேக்கரண்டி கடலை மாவை மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யவும்.
20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் கருமை புள்ளிகள் தானாக மறைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
1)கருப்பு உளுந்து
2)பசும் பால்
தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கருப்பு உளுந்து சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது பசும் பால் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இதை முகம் முழுவதும் அப்ளை செய்து நன்கு உலர்ந்த பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நிற புள்ளிகள் அனைத்தும் நீங்கிவிடும்.