முகத்தை தங்கம் போல் ஜொலிக்க செய்யும் பேஸ் பேக்!! வெறும் இரண்டு பொருள் இருந்தால் போதும்!!

0
158
A base pack that makes your face shine like gold!! Just two things are enough!!
A base pack that makes your face shine like gold!! Just two things are enough!!

 

  • வயதான பின்னரும் முகத்தின் பொலிவு குறையாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் பேஸ் பேக்கை தினமும் முயற்சித்து வாருங்கள்.
  • 1)ஆவாரம் பூ
    2)கஸ்தூரி மஞ்சள் தூள்
  • ஒரு கைப்பிடி ஆவாரம் பூவை வெயிலில் காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆவாரம் பூ கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஆவாரம் பூ பொடி தேவையான அளவு வாங்கிக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி ஆவாரம் பூ பொடி சேர்த்து கலந்து விடவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யவும்.
  • 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் அதிக பொலிவாக காட்சியளிக்கும்.
  • 1)பச்சை பயறு
    2)கடலை பருப்பு
    3)கஸ்தூரி மஞ்சள் பொடி
  • அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு பயறு மற்றும் ஒரு கடலை பருப்பு போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி இரண்டு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்து சேர்த்து இரண்டு தேக்கரண்டி பன்னீர் சேர்த்து கலக்கி முகத்திற்கு அப்ளை செய்யவும்.அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகக் கருமை நீங்கி பளிச்சிடும்.
  • 1)பன்னீர் ரோஸ் இதழ் பொடி
    2)சந்தனப் பொடி
    3)ரோஸ் வாட்டர்
  • ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி பன்னீர் ரோஸ் இதழ் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து கலக்கவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் உலர விடவும்.
  • பிறகு குளிர்ச்சியான நீரில் முகத்தை கழுவவும்.இப்படி தினமும் செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
Previous articleஉடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் சத்து மிகுந்த பானம்!! இது நிபுணர்களின் பரிந்துரை!!
Next articleதலைமுடி கருப்பா அடர்த்தியாக வளர.. கருஞ்சீரகம் ஒன்று போதும்!! எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?