துளசி இலை ஒன்று போதும் குழந்தைகளின் நெஞ்சிலிருக்கும் சளி அறுத்துக்கொண்டு வெளியேறும்!! 

Photo of author

By Rupa

துளசி இலை ஒன்று போதும் குழந்தைகளின் நெஞ்சிலிருக்கும் சளி அறுத்துக்கொண்டு வெளியேறும்!!

பெரியவர்கள்,குழந்தைகள் என்று பாரபட்சமின்றி ஏற்படக் கூடிய பாதிப்பு இருமல்.அதிலும் குழந்தைகளுக்கு இந்த இருமல் தொற்றிவிட்டால் அவர்கள் ஒரு வழியாகிவிடுவார்கள்.

இருமல் ஒரு பாக்டீரியா தொற்று பாதிப்பாகும்.இருமல் பாதிப்பு இருப்பவர்கள் மூலம் இந்த தொற்று பிறருக்கு எளிதில் பரவுகிறது.குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு இந்த தொற்று அடிக்கடி ஏற்பட்டு அவதியுறுகின்றனர்.தொடர் இருமல் ஏற்பட்டால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறந்து பலவீனமாகிவிடுவார்கள்.

அது மட்டுமின்றி தொண்டை வலி,தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பாதிப்புகளும் இருமலால் ஏற்படுகிறது.குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான இருமல் பாதிப்பு எளிதில் குணமாக இந்த வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்.

1)துளசி
2)தேன்

சிறிது துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் தொடர் இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

1)பாதாம் பருப்பு
2)பூண்டு

நான்கு பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதனுடன் ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் இருமல் நிற்கும்.

1)பூண்டு
2)தேன்

இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேன் சேர்த்து குழந்தைகளை சாப்பிட வைத்தால் இருமல் பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.

1)மஞ்சள்
2)பால்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து கலக்கி குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்தால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.