இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியில் 5 வது வரிசையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வீரரை களம் இறங்கியுள்ளது இந்திய அணி.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஆனால் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது ஒரு போட்டி சமன் செய்து ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் அடித்து பெரிய இலக்கை நிர்ணயித்தது. மேலும் இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் முக்கிய இரு விக்கெட்டுகளை இழந்தது. மேலும் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாத ரன் ஓட்டத்தால் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 5 வது வீரராக ஆகாஷ் தீப் களமிறங்கியுள்ளார். இந்த திட்டத்தை ரசிகர்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்று கூறி வருகின்றனர். மேலும் மூன்றாவது போட்டியில் ஃபாலோ ஆனை தவிர்க்க முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் தீப் என்பது குறிப்பிடத்தக்கது.