பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்!

பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்!

அரியலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் இவர் கள்ளசாராய வியாபாரி ஆவார். இவர் கடந்த 11.08.2021 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் கூறியதனையடுத்து 1098 பெண்கள் அவசர உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் அரியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு இன்று அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி ராஜசேகருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூபாய் 30ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Leave a Comment