தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!

Photo of author

By Pavithra

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!

Pavithra

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!

பீகார் ரயில் நிலையத்தில் தன் தாய் இறந்தது கூட தெரியாமல்,மூன்று வயது சிறுவன் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

பீகார் பகல்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரயில் நிலையம் சென்று பார்த்த பொழுது,மனநலம் குன்றிய தாயின் 3 வயது சிறுவன் அவர் இறந்தது கூட தெரியாமல் அவரை அணைத்து தூங்கும் காட்சியை கண்டு திகைத்து போயினர்.இதனையடுத்து காவல்துறையினர் அச்சிறுவனை குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு,தாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.