டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை!

0
299
a-boy-who-went-to-tucson-was-sexually-assaulted-teacher-arrested-in-pocso
a-boy-who-went-to-tucson-was-sexually-assaulted-teacher-arrested-in-pocso

டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை!

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு சிறுவன் சரியாக படிக்கவில்லை மேலும் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருகின்றான் என சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.அதனையடுத்து அந்த சிறுவனிற்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.

அப்போது அந்த சிறுவன் டியூசன் ஆசிரியை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினான் அதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இந்த தகவல் அறிந்த அந்த சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 34 டியூசன் டீச்சரை கைது செய்தனர்.அப்போது அந்த ஆசிரியை கூறியது நான் ஜிம் பயிற்சியாளராக இருந்தேன்.என்னுடைய கணவரை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வருகின்றேன்.

கொரோனா காலக்கட்டத்தில் வீட்டிலேயே டியூசன் எடுக்க முடிவு செய்து டியூசன் வந்ததாகவும் கூறினார்.இந்நிலையில் டியூசன் படிக்க வந்த 16வயது பள்ளி மாணவனுக்கு டீச்சர் மது கொடுத்துள்ளார்.அதன் பிறகு மாணவன் மயக்க நிலைக்கு சென்ற பிறகு டியூசன் டீச்சர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.டியூசன் சென்ற அந்த மாணவனுக்கு மதுகொடுத்து அந்த டீச்சர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.அதனால் தான் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளான்.

அதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட டியூசன் டீச்சர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. குழந்தைகளுக்கு பாடம் கற்று கொடுக்கும் ஆசிரியை இவ்வாறு செய்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇன்று 95வது பிறந்த நாளை கொண்டாடும் பாஜகவின் அசைக்க முடியாத சக்தி! மோடியை பார்த்தவுடன் இந்த வயதிலும் அவ்வளவு மகிழ்ச்சி!
Next articleவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here