பல நன்மைகளை தரும் பிரண்டை… இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்…
நமது உடலுக்கு எண்ண முடியாத அளவிற்கு நன்மைகளை தரும் பிரண்டையை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பிரண்டையை அதிகம் பயன்படுத்துவதற்கு காரணம் இதில் உள்ள நிறைய நன்மைகள் தான் காரணம். இந்த பிரண்டையை ஆயுள் நீட்டிக்கும் மூலிகை என்று கூட சொல்லலாம். இந்த பிரண்டை நாம் துவையலாக பயன்படுத்தலாம். பிரண்டையை சூப் செய்தும் பயன்படுதலாம்.
பிரண்டையின் நன்மைகள்…
* பிரண்டையை துவையலாக செய்து அதை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எலும்பு உறுதி பெறும்.
* ஆண்மையை அதிகரிக்கும் சக்தி பிரண்டைக்கு உள்ளது. இதனால் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அனைவரும் பிரண்டையை பாலில் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பயன்படுத்தலாம்.
* பிரண்டை ஜீரணசக்தியை அதிகரித்து ஜீரணம் சிறப்பாக நடைபெற உதவுகின்றது.
* பிரண்டையை சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
* பிரண்டையை சாப்பிடுவதன் மூலம் மூளையின் நரம்புகள் பலம் பெறும். நியாபக சக்தி அதிகரிக்கும்.
* குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அடி வயிற்றில் சதை போடத் தெடங்கும். இந்த சதையை கட்டுப்படுத்த பிரண்டை உதவி செய்யும்.
* மாதவிடாய் சீராக இல்லாமல் இருக்கும் பெண்கள் அனைவரும் பிரண்டைச் சாறு ஆறு ஸ்பூன் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பயன்படுத்தினால் மாதவிடாய் சீராகும்.
* பிரண்டையை நெய்யில் வதக்கி அதனுடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.
பிரண்டை பயன்படுத்தும் முறை…
நாம் பிரண்டையை எண்ணெயாகவும், துவையலாகவும், வற்றலாகவும், சூப் செய்தும் பயன்படுத்தலாம்.
பிரண்டை துவையல்…
பிரண்டையை துவையல் செய்து சாப்பிடும் பொழுதும் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. பிரண்டை துவையலை சாப்பிடுவதால் உடலில் உள்ள வாயு நீர் வெளியேறும். பிரண்டை துவையல் பெருங்குடல் பிரச்சனையை தீர்த்து விடும். குடலில் புழுக்கள் இருந்தாலும் அதை வெளியேற்றி விடும்.
பிரண்டை துவையல் செய்வதற்கு பிரண்டை தண்டுகளை எடுத்துக் கெள்ள வேண்டும். பின்னர் அந்த தண்டுகளில் உள்ள நார்களையும், தோலையும் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு ஒரு வாணலியில் நெய்யை சிறிதளவு ஊற்றி அதித் சிறியதாக நறுக்கிய பிரண்டை துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதே வாணலியில் காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட்டு பின்னர் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள பிரண்டையையும் தற்பொழுது வதக்கிய இஞ்சி, மிளகாய் எல்லாவற்றையும் ஒரு மிக்சியில் சேர்த்து அரைத்து கொண்டால் பிரண்டை துவையல் தயார். இதை சாப்பாட்டுக்கும், இட்லி, தோசைக்கும் பயன்படுத்தலாம்.
பிரண்டை இலை துவையல்…
பிரண்டையின் இலைகளை வைத்தும் துவையல் செய்து பயன்படுத்தலாம். பிரண்டை இலையை நன்கு சுத்தம் செய்து அடுப்பை பற்ற வைத்து வாணலி வைத்து அதில் பிரண்டை இலை, இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து மிக்சியால் போட்டு அரைத்து துவையல் செய்து பயன்படுத்தலாம்.
பிரண்டை வற்றல்…
பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து அதன் மேல் உப்பு கலந்த மோரை ஊற்றி வெயிலில் வைத்து காய வைக்க வேண்டும். வெயிலில் நன்கு காய்ந்த பிறகு இதை அப்படியே எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து வற்றலாக பயன்படுத்தலாம்.
பிரண்டை எண்ணெய்…
பிரண்டை எண்ணெய் செய்வதற்கு பிஞ்சு பிரண்டைதான் தேவைப்படும். பிஞ்சு பிரண்டை இருந்தால் அதை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பில் வாணலி வைத்து இந்த பிரண்டை துண்டுகள் மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டு நல்லெண்ணெயை கொதிக்க வைக்க வேண்டும். நல்லெண்ணெய் கொதிக்கும் பொழுது நறுக்கி வைத்துள்ள பிரண்டை துண்டுகளை போட்டு வதக்க வேண்டும். பின்னர் இதை வடிகட்டி அந்த எண்ணெயை மட்டும் நாம் வலிக்கு பயன்படுத்தலாம். குறிப்பாக மூட்டு வலிக்கு இந்த எண்ணெயை நாம் பயன்படுத்தலாம்.
பிரண்டை சூப்…
பிரண்டையை சூப் செய்து குடிப்பதும் உடலுக்கு அதிக நன்மைகளை கொடுக்கும். பிரண்டையை தோல் நீக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த இந்த பிரண்டை விழுதை ஒரு குக்கரில் சேர்க்க வேண்டும். பின்னர் பிரண்டை விழுதுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து அதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்துவிட வேண்டும்.
பின்னர் ஒரு விசில் வந்த பிறகு பிரண்டையின் நீரை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் உள்ள பிரண்டை, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு போன்றவற்றை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வடிகட்டிய நீரை இதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு மீண்டும் வடிகட்டி அதை குடிக்கலாம்.