ஹாலிவுட்டில் இருந்து அட்லிக்கு வந்த அழைப்பு!!! ஜவான் திரைப்படம் கொடுத்த பெருமை!!!

0
28
#image_title

ஹாலிவுட்டில் இருந்து அட்லிக்கு வந்த அழைப்பு!!! ஜவான் திரைப்படம் கொடுத்த பெருமை!!!

ஜவான் திரைப்படத்தை இயக்கிய அட்லி அவர்களுக்கு ஹாலிவுட் திரையுலகில் இருந்து திரைப்படம் இயக்குவதற்கு அழைப்பு வந்ததாக இயக்குநர் அட்லி அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இயக்குநர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றி பின்பு நடிகர்கள் ஜெய், ஆரியா, நஸ்ரியா, நயன்தாரா, சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் அட்லி இயக்குநராக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து நடிகர் விஜய். அவர்களுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்குநர் அட்லி அவர்கள் இயக்கினார். நடிகர் விஜய் அவர்களை வைத்து இயக்கிய மூன்று திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து இயக்குநர் அட்லி அவர்கள் நடிகர் ஷாரூக்கான் அவர்களை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்து வருகின்றது. இதுவரை 950 கோடி ரூபாயை வசூல் செய்துள்ள ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி செல்கின்றது.

உலகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜவான் திரைப்படம் மூலமாக ஹாலிவுட்டில் இருந்து இயக்குநர் அட்லிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது ஹாலிவுட் திரையுலகில் இருந்து இயக்குநர் அட்லி அவர்களுக்கு திரைப்படம் இயக்குவதற்காக அழைப்பு வருவதாக இயக்குநர் அட்லி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் படம் இயக்கு பிறகு ஹிந்தி சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ஷாரூக்கான் அவர்களை வைத்து படம் இயக்கி அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இயக்குநர் அட்லி அவர்களுக்கு ஹாலிவுட் திரையுலகில் இருந்து அழைப்பு வந்தது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமையாக பார்க்கப்படுகின்றது