பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்!!!

0
36
#image_title

பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்!!!

மலையாள திரையுலகில் பிரபல இயக்குநராக இருந்த கே.ஜி ஜார்ஜ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப்டம்பர்24) உயிரிழந்துள்ளார்.

ஸ்வப்னதனம் என்ற திரைப்படத்தை இயக்கியது மூலமாக கே.ஜி ஜார்ஜ் அவர்கள் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து வியாமோகம், ரப்படிகலுடே கதா, இனியவள் உரங்கட்டே போன்று 19 திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.

இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் நடிகர் மம்மூட்டி அவர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் வேலை செய்துள்ளார். மேலும் இயக்கிய படங்களுக்காக கேரளா மாநில விருதுகளை பல முறை வென்றுள்ளார். இந்நிலையில் இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று(செப்டம்பர்23) இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்டம்பர்24) இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் 77வது வயதில் உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவு மலையாள சினிமாவுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்களின் மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.