பட்டாகத்தியில் கேக் வெட்டிய திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்!! போலீசார் வழக்கு பதிவு!!

பட்டாகத்தியில் கேக் வெட்டிய திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்!! போலீசார் வழக்கு பதிவு!!

மதுரை செல்லூரில் பிறந்தநாள் கேக்கை நண்பர்களுடன் வாளால் வெட்டி கொண்டாடி சமூக வலைதளங்களில் வெளியிட்ட திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

செல்லூர் மீனாம்பாள்புரம் செல்வம் மகன் முத்துமணி 35. இவர் திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

இவரது பிறந்தநாளை நண்பர்களுடன் செல்லூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வாளால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதை செல்போனின் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவால் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோவை தந்தி டிவியில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம் பார்த்த செல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.

வாளால் கேக்வெட்டி கொண்டி பரபரப்பை ஏற்படுத்திய மேலும் செல்லூர் காவல்துறையினர் முத்து மணி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.