குட்கா முறைகேடு முன்னாள் அமைச்சர்களின் மீது வழக்கு பதிவு! தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் !!..
அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தினால் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.இன்று தீர்ப்பு வரும் நிலையில்,குட்கா ஊழல் வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றார்கள். இந்த குட்கா ஊழல் வழக்கில் தொடர்பாக வியாபாரியான தொழிலதிபர் மாதவராவ் மற்றும் அரசு அதிகாரிகள் மூன்று பேர் உட்பட ஆறு பேரை சிபிஐ போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அந்த ஆறு பேர்களின் மீதும் முதல் கட்டமாக சிபிஐ போலீசார் கோர்ட்டில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.இதைத்தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் உரிய ஆதாரங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது இரண்டாவது கட்ட குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் போலீஸ் டி.ஜி.பிக்கள் ஜார்ஜ், டி.கே ராஜேந்திரன் மற்றும் சில அதிகாரிகளின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். கடந்த சில மாதங்களாக குட்கா ஊழல் வழக்கு பற்றிய தகவல்கள் சிறிதும் வெளிவரவில்லை.
ஆனால் தற்போது இருக்கும் சூழலில் இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியது.முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையாளர்களாக ஓய்வு பெற்ற டி,ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்புக்கு அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளின் மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதனடிப்படையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்டார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் விளக்கம் தெரிவித்தனர்.