மெட்ரோவில் இளம்பெண் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம்! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு 

Photo of author

By Savitha

மெட்ரோவில் இளம்பெண் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம்! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள்.

டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர் கைகுட்டை அளவிலான உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம் செய்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருத்தியும் விமர்சனமும் இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி மெட்ரோ நிர்வாகம் சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான ஆடைகள் மற்றும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லி மெட்ரோ பராமரிப்பு மற்றும் இயக்க விதிகளின்படி ஆபாசம் என்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தில் பயணம் செய்யும்போது கண்ணியத்தை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயணத்தின் போது ஆடைகளின் விருப்பம் தேர்வு என்பது தனிப்பட்ட விவகாரம் என தெரிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம் பயணிகள் பொறுப்புள்ள முறையில் தங்களது நடத்தையை சுய ஒழுங்கு முறைப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.