மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டம்

0
172
#image_title

மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை கோவையை தொடர்ந்து மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்கிட முன்னேற்பாடுகளை தெற்கு ரயில்வே தீவிரப் படுத்தி உள்ளது.

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்காகவும் , ரயில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடையை மின்மயமாக்கம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

பணிகள் மூன்று மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் ஒப்பந்த புள்ளியில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை ரயில் நிலையத்தில் மூன்று மற்றும் நான்காவது நடைமேடை முழுவதும் மின்மயமாக்கம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

பணிகள் நிறைவு பெறும் பட்சத்தில் சென்னை மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்குவது குறித்து ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Savitha