மது போதையில் கார் ஓட்டிய வழக்கு!!! சூரியா பட நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!!!

Photo of author

By Sakthi

மது போதையில் கார் ஓட்டிய வழக்கு!!! சூரியா பட நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!!!

Sakthi

மது போதையில் கார் ஓட்டிய வழக்கு!!! சூரியா பட நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!!!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சூரியா பட நடிகர் தலிப் தாகில் அவர்களுக்கு தற்பொழுது சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

நடிகர் சூரியா நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான அஞ்சான் திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியானது. இதில் சமந்தா, வித்யுத் ஜமால், சூரி, முரளி சர்மா, மனோஜ் பஜ்பயே மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தலிப் தாகில் அவர்கள்.

நடிகர் தலிப் தாகில் அவர்கள் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 1984ம் ஆண்டில் வெளியான குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஏற்படுத்திய கார் விபத்தில் தற்பொழுது தீர்ப்பு வெளியாகி இருக்கின்றது.

நடிகர் தலிப் தாகில் அவர்கள் கடந்த 2018ம் ஆண்டில் குடித்துவிட்டு மது பாதையில் கார் ஓட்டினார். மது பாதையில் காரை ஓட்டிய நடிகர் தலிப் தாகில் அவர்கள் ஆட்டோ மீது காரை விட்டு விபத்து ஏற்படுத்தினார். இதில் ஆட்டோவில் பயணித்த இரண்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த விபத்து வழக்காக பதியப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த விபத்து வழக்கில் நடிகர் தலிப் தாகில் அவர்களுக்கு 5 ஆண்டுகள் கழிந்து வழக்கை விசாரித்த நீதமன்றம் இரண்டு மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது மட்டுமில்லாமல் சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்த வழக்கில் வெறும் அபராதம் மட்டும் விதிக்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.