கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!!

Photo of author

By Savitha

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!!

Savitha

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு. கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு வருகிற 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு.

கலாஷேத்ரா கல்லூரியில் முன்னாள் மாணவிக்கு பாலியல் கொடுத்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மனை விசாரணை செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியம் வருகிற 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஹரி பத்மனை புழல் சிறையில் அடைத்தனர்.