District News, Breaking News

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!.

Photo of author

By Parthipan K

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!.

Parthipan K

Button

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!.

விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு மணிநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது வயது 47.இவரது மனைவி தேவி. இவர்களது மகள் ரம்யா. இவருக்கு வயது 18. இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஃபார்ம் படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அவர் வகுப்பு முதல் மாடியில் அமைந்துள்ளதால் மேலே ஏறி சென்றுள்ளார். பின்னர் காலை 10:30 மணிக்கு சக மாணவிகளிடம் கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பறை விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த மாணவி திடீரென்று முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் அந்த மாணவி பலத்த காயமடைந்தார். மாணவியின் இந்த தற்கொலை முயற்சி அங்கிருந்த மாணவ மாணவிகளுக்கு இடையே மற்றும் பேராசிரியர்களுக்கிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது.பின்னர் காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவி தற்கொலை சம்பவம் குறித்து பேராசிரியர், மாணவியின் தோழிகள் மற்றும் பள்ளியின் பாதுகாவலர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா மற்றும் டி.எஸ்.பி பார்த்திபன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதால் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை!

சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் மோசடி! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Leave a Comment