ஈரோடு மாவட்டத்தில் லாரியில் சிக்கிய கல்லூரி மாணவன்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
190
A college student stuck in a truck in Erode district! A lot of excitement in the area!
A college student stuck in a truck in Erode district! A lot of excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் லாரியில் சிக்கிய கல்லூரி மாணவன்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஜாசன்(21). மெல்வின் ஜாசன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். மேலும் அவரது நண்பர் மேட்டூர் கொளத்தூர் பாப்பாத்தி அம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த பரத் பிரியன்(21) என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் பரத் பிரியன் ஓட்டினார்.

மேலும் கோவை பைபாஸ் ரோடு பவானி லட்சுமி நகர் அருகே உள்ள சமத்துவபுரம் மேடு பகுதியில் அந்த மோட்டார் சைக்கிள் ஆனது வந்து கொண்டிருந்தது. அதே பகுதியில் லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்தது அதனை முந்த முயற்சி செய்தனர். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்தவரின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிள் வலது பக்கமாக திருப்பி உள்ளார்கள் அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

அதில் லாரியின் சக்கரத்தில் மாணவர் மெல்வின் ஜாசன் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இடது பக்கம் விழுந்த  பரத் பிரியன் காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த  தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் மெல்வின்  ஜாசன் உடலை மீட்டு  பிரேதபரிசோதனைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்  படுங்காயம் அடைந்த பரத் பிரியன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Previous articleநன்றாக பேசிக் கொண்டிருந்த மாணவி திடீர் கீழே விழுந்து மரணம்!!
Next articleஓ பன்னீர்செல்வம் மீது திருட்டு வழக்கு! சி.வி சண்முகத்தின் அதிரடி செயல்!