ஏழு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம்! கட்டி முடிக்காத கட்டிடத்திற்கு ஆண்டுதோறும் நிதியை மட்டும் செலவு செய்யும் நகராட்சி!

0
132
A community center that has been under construction for seven years! A municipality that only spends funds on an unfinished building every year!

ஏழு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம்! கட்டி முடிக்காத கட்டிடத்திற்கு ஆண்டுதோறும் நிதியை மட்டும் செலவு செய்யும் நகராட்சி!

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் சாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமண சமுதாயக்கூடம் மற்றும் அதன் அருகிலேயே இறைச்சி கூடமும் கட்டும் பணி நடந்து வந்தது. திருமண மண்டபத்திற்கு அருகிலேயே இறைச்சிக்கூடம் கட்டக் கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நகராட்சி நிர்வாகம் அதனை காதில் வாங்காமல் தொடர்ந்து பணிகளை நடத்தி வந்தது. இருப்பினும் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டும் பணி முடியாது என்ற காரணத்தால் மேலும் கூடுதலாக ரூபாய் 10 லட்சத்தில் பணிகளை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது சமுதாயக்கூடம் மற்றும் இறைச்சிக்கூடங்கள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதன் பணிகள் இன்னும் முடிவடையாமல் அப்படியே உள்ளது. சுமார் 7 ஆண்டுகளாக இந்த கட்டிடங்கள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், முடியும் தருவாயில் இருந்தாலும் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நகராட்சி அதிகாரிகள் கவனம் எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் மக்களின் வரிப்பணம் இந்த கட்டிடங்களில் முடங்கி உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சியில் கொண்டுவரும் திட்டங்களை அதிகாரிகளே அதை கிடப்பில் போட்டு அந்த பணிகளை முடிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏழை எளிய மக்கள் குறைந்த வாடகையில் நகராட்சிகளில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடங்களில் தங்களது இல்ல நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நினைப்பார்கள் ஆனால்நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கில் உள்ள இந்த கட்டிடங்களை விரைந்து கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பூந்தமல்லி நகராட்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

Previous articleதிருச்சி மாவட்டத்தில்  ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?..
Next articleஉபரி நீரால் வெள்ளம் சூழ்ந்து 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு! 300 ஏக்கர் பரப்பிலான சாகுபடிகள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!