ஆளும் கட்சி கூட்டணியில் விழும் விரிசல்.. திருமா-வின் திடீர் நடவடிக்கை!! தங்கர் பச்சனின் சூசன பேச்சு!!

ஆளும் கட்சி கூட்டணியில் விழும் விரிசல்.. திருமா-வின் திடீர் நடவடிக்கை!! தங்கர் பச்சனின் சூசன பேச்சு!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரமானது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைவரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பவர்கள் மட்டும் தங்களது கருத்துக்களை கூற முடியாமல் திணறி வந்தனர்.குறிப்பாக அனைவரது கவனமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன் மீது தான் இருந்தது.

எந்த ஒரு அரசியல் மற்றும் பொதுநலன் சார்ந்த விவகாரம் என்றாலும் திருமாவின் குரல் அங்கு இருக்கும்.ஆனால் இத்தனை உயிரிழப்புகள் நடந்தும் இவர் சார்பாகவும் இவரது கட்சி சார்பாகவும் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.இதனை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சனம் செய்தனர்.அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக திருமா, சென்னையில் வரும் 24ஆம் தேதி போராட்டம் நடத்துவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இவருக்கு கருத்து தெரிவிக்கும் வகையில் பாமக நிர்வாகி மற்றும் இயக்குனருமான தங்கர்பச்சான் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளே திமுகவின் எம்எல்ஏக்கள் என்பது தற்பொழுது அனைவரும் அறிந்த ஒன்று.அவர்கள் பதவி விலக வேண்டும் மேலும் அத்துறைக்கு பொறுப்பாகியுள்ள அமைச்சரும் பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுடன் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேற்கொண்டு திருமா நடத்தும் போராட்டத்தில் இதனையெல்லாம் கட்டாயம் வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டும் என்பதை தங்கர் பச்சான் தூண்டி விடுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.இவ்வாறு போராட்டம் நடக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சிக்குள்ளேயே மோதல் உருவாகக் கூடும் என்றும் பலரும் பேசி வருகின்றனர்.