நகை கடையில் அலைமோதும் கூட்டம்! தங்கம் விலை சரிவு!

நகை கடையில் அலைமோதும் கூட்டம்! தங்கம் விலை சரிவு!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை ஏற்றத்துடனே காணப்பட்டது.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

அதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம்  பொங்கல் பண்டிகை வரை தங்கம்  ஏறுமுகத்தையை சந்தித்தது.இந்நிலையில் நேற்று பவுன் ரூ 42,600 க்கு விற்பனை செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து இன்று பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.அந்த வகையில் ஒரு பவுன் ரூ 42,560 க்கு விற்பனையாகின்றது.

ஒரு கிராம் 5325 ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் குறைந்து ரூ 5320 க்கு விற்பனையாகின்றது.அதேபோல வெள்ளி விலையும் குறைந்துள்ளது.ஒரு கிராம் ரூ 74.50 ல் இருந்து ரூ74.30 ஆகவும்,ஒரு கிலோ ரூ 74,500 ல் இருந்து ரூ 74,300 க்கு விற்பனையாகின்றது. இதனால் நகை கடையில் கூட்டம் அலைமோதி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment