அதிக வாசனை நிறைந்த ஏலக்காய் ஒரு மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது.மணம் நிறைந்த பொருளான ஏலக்காய் பல்வேறு நோய்களை அழித்து உடலை காக்கும் மூலிகை மருந்தாக செயல்படுகிறது.ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்த விலை மதிப்பு கொண்ட பொருளாகும்.
ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக ஏலக்காய் திகழ்கிறது.ஏலக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்தால் நிச்சயம் தினமும் அதை உட்கொள்வீர்கள்.
ஏலக்காய் மருத்துவ குணங்கள்:
1)கால்சியம் 2)பொட்டாசியம் 3)சோடியம் 4)வைட்டமின் சி 5)இரும்பு 6)காப்பர் 7)மாங்கனீசு
நாம் பயன்படுத்தும் 100 கிராம் ஏலக்காயில் உள்ள சத்துக்கள்:
**311 கலோரி
**11 கிராம் புரதம்
**68 கிராம் கார்போஹைட்ரேட்
**7 கிராம் கொழுப்பு
இரவில் ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:
1)தினமும் ஒரு ஏலக்காய் சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.இரவு நேரத்தில் உணவு உட்கொண்ட பிறகு ஏலக்காய் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்படும்.
2)உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை ஏலக்காய் செய்கிறது.தினம் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டால் உடல் கழிவுகள் வெளியேறும்.
3)அல்சர் பிரச்சனை சரியாக தினமும் ஒரு ஏலக்காய் உட்கொள்ளலாம்.செரிமானத்தை ஊக்குவிக்கும் பொருளாக ஏலக்காய் இருக்கின்றது.
4)வாய்வழி சுகாதாரத்தை பேணிக் காக்கும் அருமருந்து ஏலக்காய்.இதை உணவு உட்கொண்ட பின்னர் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவது கட்டுப்படும்.
5)சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்திக் கொள்ள தினம் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுங்கள்.
6)உடலுக்கு புத்துணர்வு கிடைக்க ஏலக்காயை நீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஏலக்காயில் இருக்கின்றது.
7)வாந்தி,குமட்டல் போன்ற தொந்தரவுகளை குணப்படுத்திக் கொள்ள ஏலக்காய் தேநீர் செய்து பருகலாம்.