ஈரோடு மாவட்டத்தில் கறிக்கடை தொழிலாளி திடீர் மரணம்! சாவில் மர்மம் அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் கறிக்கடை தொழிலாளி திடீர் மரணம்! சாவில் மர்மம் அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கம்பிளியம்பட்டி , காசிலிங்க கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் சரவணன் (39). இவர் பெருந்துறை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியில் கறிக்கடையில் கறி வெட்டும் வேலை பார்த்து வருகிறார். சரவணன் தினந்தோறும் மது அருந்துவார். இது இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து கடைக்கு உள்ளேயே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் கடை பெருக்காமல் இருந்த நிலையை அக்கம் பக்கத்தினர் மற்றும் கடை ஊழியர்கள் கடையில் பின்புற ஜனங்களை உடைத்து உள்ளே சென்று தூங்கிய நிலையில் இருந்த சரவணன் இறுதிப் பார்த்தார்கள்.

மேலும் சரவணன் எழாமல் இருந்த காரணத்தால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக சரவணனையை மீட்டு  ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு  அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.