பெண்களை பெருமைப்படுத்தும் அலங்கார ஊர்தி!! மத்திய அரசை பிரமிக்க வைத்த தமிழ்நாடு!
கடந்த வருட குடியரசு தின விழாவின் போது தமிழக அரசு சார்பில் இருந்து ஊர்வலங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதனை மத்திய அரசு நிராகரித்தையொட்டி இந்த வருடம் தமிழக அரசிற்கு வாய்ப்பளித்துள்ளது.
அந்த வகையில் இம்முறை குடியரசு தின விழாவில் நமது தமிழக பெருமையை பறைசாற்றும் வகையில் பெண்களை முன்னோட்டமாக வைத்துள்ளனர்.
குடியரசு தின விழாவில் பங்கேற்கப்படும் தமிழக ஊர்தியில் முதலாவதாக ஔவையாரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வேலு நாச்சியார், எம் எஸ் சுப்புலட்சுமி, நாட்டிய பேரொளி தஞ்சை பால சரஸ்வதி அவர்களின் திருவுருவச் சிலையும் அந்த அலங்கார உறுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவையொட்டி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது போல அவரின் திருவுருவச் சிலையும் அதில் உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழாவில் பங்கேற்கப்படும். நமது தமிழகத்தில் பெண்களை பறைசாற்றும் வகையில் நமது அடையாளத்தையே எடுத்துக் கூறுவது பெருமையை சேர்த்துள்ளது.
குடியரசு தின விழாவின் பொழுது நமது தமிழக அரசு சார்பில் இவ்வாறு தயார்படுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்தி செல்வதை அடுத்த முப்படை வீரர்கள் விமான சாகசம், அணிவகுப்பு என அனைத்தும் நடைபெற்று விழாவே கோலாகலமாக இருக்கும்.