வித்தியாசமான வெற்றிலை லட்டு! எப்படி தயார் செய்வது!!

0
113
#image_title

வித்தியாசமான வெற்றிலை லட்டு! எப்படி தயார் செய்வது!!

வெற்றிலை நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த வெற்றியை வைத்து இனிப்பு கூட செய்யலாம். ஆம் வெற்றிலையை பயன்படுத்தி லட்டு எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வெற்றிலை என்பது பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். சிலர் வாய் சிவக்க வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து வாயில் போட்டு மெல்ல பார்த்திருப்போம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற வழக்கமும் உள்ளது.

வெற்றிலையை நாம் தலை வலிக்கும் பயன்படுத்தலாம். ஒற்றை தலை வலியால் அவதிப்படும் ஒரு சிலர் வெற்றிலையை சிறிது எடுத்து அதை நெற்றியில் ஒட்டி வைத்திருப்பார்கள். இவ்வாறு வெற்றிலையை வைத்து நாம் பல வகையில் பலன் பெறலாம். அந்த வகையில் வெற்றிலையை வைத்து லட்டு எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றிலை லட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* வெற்றிலை – 3
* மில்க்மேய்ட் – 50 கிராம்
* தேங்காய் துருவல் – ஒரு கப்
* டூட்டி புரூட்டி – 4 ஸ்பூன்
* குல்கந்து – 4 ஸ்பூன்
* நெய் – தேவையான அளவு

வெற்றிலை லட்டு தயார் செய்யும் முறை…

முதலில் மிக்சி ஜாரில் வெற்றிலைகளை இரண்டாக கிழித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் எடுத்து வைத்துள்ள மில்மேய்ட் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் தேவையான அளவு நெய் சேர்த்து அதில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் அரைத்து வைத்துள்ள வெற்றிலை கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையானது வாணலியில் ஒட்டாமல் வர வேண்டும். அதுவரை இதை நன்கு கிளற வேண்டும்.

அதன் பின்னர் இந்த கலவையை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு எடுத்து வைத்துள்ள குல்கந்து மற்றும் டூட்டி புரூட்டி இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் வெற்றிலை கலவையை எடுத்து உருண்டையாக பிடித்து அந்த உருண்டையின் நடுவே கலந்து வைத்துள்ள டூட்டி பூரூட்டி – குல்கந்து கலவையை வைத்து லட்டு வடிவத்தில் பிடித்து பின்னர் இந்த உருண்டையை தேங்காய் துருவலில் போட்டு காட்டினால் சுவையான வெற்றிலை லட்டு தயார்.

Previous articleகல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்.!!
Next articleநான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!