எம்.ஜி.ஆரை படுமோசமாக அவமானப்படுத்திய ஒரு இயக்குநர்…. – அவர் யார்ன்னு தெரியுமா
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார்.
எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்தார். இதன் பின்பு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நடிக்க நடித்த அவர் தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்கும்போது நிறைய அவமானங்களை சந்தித்துள்ளார். எம்ஜிஆரை அதட்டி, மிரட்டிய ஒரே ஒரு இயக்குநர் என்றால் அது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம் தான். இவர் ரொம்ப கோபக்காரர். மேலும், நடிகர், நடிகைகளை அடக்கி வைப்பார். இவர் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தை 1956ம் ஆண்டு இயக்கினார்.
இப்படத்தில், எம்.ஜி.ஆர். பானுமதி உட்பட பலர் நடித்தனர். அப்போது, இப்படத்தின் படப்பிடிப்பில் ‘அல்லா மீது ஆணையாக’ என்று சொல்வதற்கு பதிலாக ‘அம்மாவின் மீது ஆணையாக’ என்று கூறினார். உடனே, டி.ஆர்.சுந்தரம் உடனே கட் சொல்லி விட்டு, ‘அலிபாபாவுக்கு அல்லாதான் எல்லாம்.. உன் இஷ்டத்துக்கு வசனத்தை மாத்தி பேசாதே’ என்று கோபமாக கூறினார். இது எம்ஜிஆருக்கு அவமானமாகிவிட்டது. இதன் பிறகு இயக்குநர் சொன்ன வசனத்தையே அவர் கூறி நடித்தார்.
ஒருநாள் இப்படத்தில் எடுத்த காட்சியை ரஷ் போட்டு டி.ஆர்.சுந்தரம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆர் தன் நண்பருடன் டி.ஆர்.சுந்தரத்தை பார்க்கச் சென்றிருந்தார்.
இதைப் பார்த்த அவர் எம்ஜிஆரிடம், நீ மட்டும் உள்ளே வா…. உன் கூட வந்தவர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். இது எம்.ஜி.ஆருக்கு ரொம்ப அவமானமாகிவிட்டது. பொறுமையாக இருந்தார். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதன் பின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் ஒரு படம் கூட நடிக்கவே இல்லையாம்.