பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!!

0
145
#image_title

பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!!

ஏ. ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியில் நடந்த சம்பவத்தை மதரீதியாக ஒப்பிடக்கூடாது என்றும் மதரீதியாக ஒப்பிட்ட பாஜக நிர்வகிக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசை கச்சேரி மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. சென்ற மாதம் 12ஆம் தேதி இசைக்கச்சேரி நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், மழை காரணமாக அந்த இசைக்கச்சேரி கைவிட வைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, செப்டம்பர் 10 ஆம் தேதி நேற்று ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசைக்கச்சேரி மிகப் பிரமாண்டமாக கோலாகலமாக நடந்தது. ஆனால் அதில் தான் மிகப் பெரிய பிரச்சனையும் உண்டாகியது. 50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து 4-6 கிலோ மீட்டர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகியது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உரிய டிக்கெட்களை வாங்கினாலும் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியேற்றியது அவர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. 2000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் வாங்கியும் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ரசிகர்கள் கடுமையாக சாடினர். மேலும் பாதுகாவலர்களிடமும் காவல் துறையிடமும் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாக பரவியது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டருடன் தாம்பரம் காவல்துறை ஆணையர் விசாரணையும் நடத்தி வருகிறார். நடந்த சம்பவத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் தனது வருத்தத்தையும், மன்னிப்பும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், சென்னையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய “மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில், ஏற்பாட்டாளர்களின் நிர்வாகத் தவறால் கடும் அவதி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல், இசை நிகழ்வுகளை மக்கள் கொண்டாடும் விதத்தில் அரசு வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இதுதான் வாய்ப்பு என்று பார்த்து, ஏ.ஆர்.ரகுமானின் மதத்தை குறிப்பிட்டு வன்மமான வெறுப்புக் கருத்தை பாஜகவின் பொருளார் எஸ்.ஆர்.சேகர் பேசியதற்கு தனது கடும் கண்டனத்தை அவர் தெரிவித்துள்ளார். பாஜகவினரின் இந்த அநாகரீகமான செயல் ஏற்க முடியாதது, தமிழ் நாட்டு மக்களும், இசை ரசிகர்களும் உங்களுக்கு தக்க பாடம்புகட்டுவார்கள் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

author avatar
Parthipan K