தனுசை புலம்ப வைக்கும் இயக்குனர் !! தன் அண்ணனை மிஞ்சி விட்டார் !!

0
102
A director who makes Dhanusa wail !! He surpassed his brother!!
A director who makes Dhanusa wail !! He surpassed his brother!!

தனுசை புலம்ப வைக்கும் இயக்குனர் !! தன் அண்ணனை மிஞ்சி விட்டார் !!

வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுசுக்கு பல படங்கள் கைவசம் உள்ளது. மேலும் தனுசை வைத்து படம் பண்ண பல இயக்குனர்கள் காத்துக் கொண்டுள்ளனர். தற்போது அவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் செல்வராகவனை வைத்து சாணி காயிதம் படத்தை இயக்கியவர்.

இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் தனுஷ் இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டு இருக்கிறார். தனுஷ் விரும்பிய காரை தரவில்லை என்றும், தன்னை சரியாக கவனிக்கவில்லை என்றும் குறை கூறிக் கொண்டே இருந்தார். இயக்குனருக்கு இந்த பிரச்சினைகள் இருந்தாலும், படப்பிடிப்பிற்காக குண்டு வெடிப்பது போன்ற சம்பவத்தால் மேலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

இந்த பிரச்சினைகளால் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகி வருகிறது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் இந்த கால தாமதத்தால் கிறிஸ்துமஸ்க்கு தள்ளி போய் இருக்கிறது. இயக்குனர் மிகவும் கால தாமதம் செய்வதால் தனுஷ் கடுமையான கோபத்தில் இருக்கிறார்.

பொதுவாக இயக்குனர் செல்வராகவன் தான் இந்த மாதிரி கால தாமதம் செய்வார் ஆனால் இவர் அவரை விட அதிகமான கால தாமதம் ஏற்படுத்துகிறார் எனவும், தன்னுடைய அடுத்த படங்களின் கால்ஷீட்டிற்கு தடையாக இருக்கிறார் எனவும் தனுஷ் கூறியுள்ளார்.

author avatar
CineDesk