தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!!

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!!

அரசு பள்ளியில்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  ரத்து செய்யப்படுவதாக எழுந்த சந்தேகம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை  2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. வரும் கல்வியாண்டில் எல்கேஜி, வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன.

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த தெளிவான முடிவு அறிவிக்கப்படவில்லை. 4  முதல் 6  வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி நடைமுறையில் உள்ளது. குழைந்தைகளுக்கு அடிப்படை கல்வியை கொடுக்க அங்கன்வாடி மையங்கள் இருக்கின்றன.எல்கேஜி, மாணவரின் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

தனியார் பள்ளிகளும் இதற்கென பிரத்யோக வகுப்புகள் உள்ளது. அதாவது எல்கேஜி, யுகேஜி பெயர்களில் வகுப்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் அடிப்படையில் ஒப்பிடும்போது அங்கன்வாடி குழந்தைகளின் கல்வி வளர்ச்சி சற்று குறைவாக இருப்பது தெரியப்பட்டது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ‘கிண்டர் கார்டன்’ பயிற்சி வகுப்புகளை செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொருளாதார பாதிப்பு  மற்றும் கொரோனா ஊரடங்கு, உள்ளிட்ட பெரும் அவதியால் கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகமாக இருந்தது. இதனால் எல்கேஜி, யுகேஜி நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் 1 முதல் 5-ம் வகுப்புக்கு மாற்றப்பட்டர்கள்.

இதனால் அரசு பள்ளியில் கிண்டர் கார்டன் வகுப்புகள் நீக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். அரசு பள்ளியிலும் கிண்டர் கார்டன்’ வகுப்புகள் தொடரும் என அரசு தெரிவித்தது. தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி, செயல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பள்ளிக்கல்வி  அதிகாரிகள் எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறந்த பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்கள் யாரும் கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கு நியமிக்கப்படவில்லை.

இதை வைத்து பார்க்கும்போது நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடருமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இது தொடர்பாக நல்ல முடிவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.