தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த திமுக கவுன்சிலர்!!!

Photo of author

By Savitha

விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் – தானாக முன்வந்து வழக்கு விசாரணை துவங்கியுள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது விருத்தாசலத்தில் மழலையர் தொடக்க பள்ளி வரும் திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி தன்னுடைய பள்ளியில் UKG படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் “வேலியே பயிரை மேய்ந்தது போல்” கொடூரமான ஒன்று.

கைது நடவடிக்கைகளை தாண்டி, அப்பள்ளியில் படிக்கும் சிறுமிகள் வேறு யாராவது இதுபோன்ற பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என இவ்வழக்கில் தமிழக அரசும், காவல் துறையினரும், அரசியல் தலையீடு இன்றி முறையாகவும், விரிவாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக விசாரணை செய்து 5 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.