உடலில் புரதச் சத்து அதிகரிக்க பயறு வகைகளை அரைத்து தோசை வார்த்து சாப்பிடலாம்.புரோட்டின் பவுடருக்கு பதில் இந்த தோசை சாப்பிட்டால் இயற்கையான முறையில் உடலில் புரதம் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பச்சை பயறு – 25 கிராம்
2)துவரம் பருப்பு – 20 கிராம்
3)சுண்டல் – 20 கிராம்
4)ஜவ்வரிசி – 10 கிராம்
5)உளுந்து பருப்பு -20 கிராம்
6)உப்பு – சிறிதளவு
7)வெங்காயம் – ஒன்று
8)கறிவேப்பிலை – ஒரு கொத்து
9)பச்சை மிளகாய் – இரண்டு
10)எண்ணெய் – தேவையான அளவு
11)பச்சரிசி – 25 கிராம்
செய்முறை விளக்கம்:-
முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்து பச்சை பயறு,துவரம் பருப்பு,பச்சரிசி,உளுந்து பருப்பு,ஜவ்வரிசி,சுண்டல் ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு இவற்றை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மிகஸ் செய்யவும்.அதன் பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அரைத்த மாவில் தோசை வார்க்க வேண்டும்.பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை தோசை மீது பரப்பிவிட வேண்டும்.அதன் பிறகு எண்ணெய் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.
இந்த தோசைக்கு சட்னி தேவைப்படாது.இருப்பினும் சட்னி விரும்பிகள் தக்காளி சட்னி,தேங்காய் சட்னி செய்து தோசையுடன் தொட்டு சாப்பிடலாம்.
தேங்காய்,இஞ்சி,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தால் தேங்காய் சட்னி தயார்.தக்காளி,பெரிய வெங்காயம்,பூண்டு,வரமிளகாய் ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரியவிட வேண்டும்.பின்னர் அரைத்த தக்காளி கலவையை அதில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.